1. Home
  2. தமிழ்நாடு

கோவை வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! கட்சியினர் வரவேற்பை பெற்று மேட்டுப்பாளையம் செல்கிறார்..!

Q

உதகையில் 700 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை வளாகத்தை நாளை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று கோவைக்கு விமான மூலம் விமான நிலையத்திற்கு வந்தார்.
 
அவருக்கு தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பை வழங்கினர். முதலமைச்சர் இங்கிருந்து தற்போது சாலை மார்கமாக மேட்டுப்பாளையம் புறப்பட்டார். மேட்டுப்பாளையத்தில் மதிய உணவு அருந்திவிட்டு மாலை உதகை செல்கிறார்.
 
நாளை மதியம் 4 மணி அளவில் மீண்டும் கோவைக்கு வந்து கொடிசியா மைதானத்தில் நடைபெறும் வள்ளி கும்மி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் சென்னை புறப்படுகிறார்.

Trending News

Latest News

You May Like