1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் - முதல்வர் ஸ்டாலின்..!

1

தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அதன்படியே இந்த ஆண்டும் அரசு சார்பாக போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.95 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தமாக இந்த போனஸ் வழங்கப்படும். உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களுக்கு 8.66% வரை போனஸ் வழங்கப்படும். 20 சதவீதம் போனஸ் வழங்க ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 20 சதவீதம் ஊதியம் மற்றும் கருணைத் தொகை போனஸாக வழங்கப்படும்; நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸாக பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பொதுத்துறை ஊழியர்கள் சுமார் 2.69 லட்சம் பேருக்கு போனஸ் வழங்க ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணை தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like