தி.மு.க., செயற்குழுவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!
சென்னையில் நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் நம் இலக்கு. இதற்கென தொண்டர்கள் உழைக்க வேண்டும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி நமதே. 2026ல் வெற்றி பெறுவது நமது கூட்டணி தான். தேர்தல் பணிகளை முழுவீச்சில் களத்தில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். முதல்வர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுக.,வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக உள்ளது. சமூக வலைதளங்களில் நம்மை வலுப்படுத்த வேண்டும்.
வரும் தேர்தலில் நம் கூட்டணி பெறும் வெற்றி, தமிழகத்திற்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி. தி.மு.க., கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகி கொண்டு இருக்கிறது. இவ்வாறு உதயநிதி பேசினார்.