ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

எம்.ஜி.ஆர். கழக கட்சியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் தனது 98வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் ஆர்.எம். வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
#JustIN | முன்னாள் அமைச்சர், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து#SunNews | #RMVeerappan | #CMMKStalin pic.twitter.com/oLkDmmAFbQ
— Sun News (@sunnewstamil) September 9, 2023