தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, மதுரைச் சென்றுள்ள தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதுரை பேங்க் காலனியில் உள்ள இல்லத்தில் ஓய்வில் இருக்கும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பழ.நெடுமாறனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.