1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2024 : வெளியான அதிரடி அறிவிப்புகள் - முழு பார்வை..!

1

  • சமூக நீதி, கடைக்கோடி மனிதனுக்குமான நல வாழ்வு, இளைய தமிழகம் உள்ளிட்ட தலைப்புகளில் பட்ஜெட் தாக்கல்
  • நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்
  • கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஓராண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது: தங்கம் தென்னரசு
  • சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்படும்;
  • இயற்கை பேரிடர் விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறது மத்திய அரசு: தங்கம் தென்னரசு
  • சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • சிலம்பு, மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி
  • சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு ரூபாய் 12,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  •  சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
  • தமிழக இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை: தங்கம் தென்னரசு
  • தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை
  • தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும்: தங்கம் தென்னரசு
  • மொழி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • தமிழ் இணைய கல்வி கழக மின் நூலகத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • சௌராஷ்டிரா மற்றும் பழங்குடியின மொழிகளை ஒலி வடிவில் இனவரைவியல் செய்ய ரூ. 2 கோடி: தங்கம் தென்னரசு
  • தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ. 5 கோடி நிதி
  • கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு
  • தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 
  • கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கும் இல்லம் அமைக்கப்படும்
  • திருப்பரங்குன்றம் மற்றும் திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும். 
  • 3,000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கப்படும்.1
  • கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உட்பட 8 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த ரூ. 5 கோடி நிதி: தங்கம் தென்னரசு
  • மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் 100 நூலகங்களில் இடம் பெற ரூ. 2 கோடி ஒதுக்கீடு
  • கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் ரூ. 17 கோடியில் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு
  • சிந்து வெளி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்: தங்கம் தென்னரசு
  • தமிழர்களின் பாரம்பரியங்களைக் கண்டறிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்படும்: தங்கம் தென்னரசு
  • குடிசை இல்லா தமிழ்நாடே இலக்கு
  • 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
  • குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டப்படும்
  • ரூ. 1000 கோடி செலவில் கிராம சாலைகள்
  • கிராமச் சாலை மேம்பாட்டுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • இந்தாண்டில் 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படும்: தங்கம் தென்னரசு
  • சென்னை மாநகராட்சியை அடுத்துள்ள விரிவாக்க பகுதிகளில் ரூ.300 கோடியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்
  • ரூ. 500 கோடியில் 5000 நீர்நிலைகள் புனரமைப்பு
  • குடிநீர் வசதி மேம்பாடு
  • ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய சிறு பாசன ஏரிகள், ரூ. 500 கோடி செலவில் 5000 நீர்நிலைகள் புனரமைக்கப்படும்
  • 100 நாள் வேலை என்று அழைக்கப்படும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ. 3300 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு
  • முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம்
  • 5 லட்சம் ஏழைக் குடும்பங்களில் வறுமையை அகற்ற முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் அறிமுகம்: தங்கம் தென்னரசு
  • சென்னையில் சாலைகளை அகலப்படுத்த ரூ. 300 கோடி
  • சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
  • வட சென்னை வளர்ச்சிக்கு ரூ. 1000 கோடி
  • வட சென்னையில் கட்டமைப்பை மேம்படுத்த 'வட சென்னை வளர்ச்சி திட்டம்' ரூ. 1000 கோடியில் மேற்கொள்ளப்படும்: தங்கம் தென்னரசு
  • சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க ஆர்.கே. சாலை, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில் சாலை உள்ளிட்டவை ரூ. 300 கோடியில் அகலப்படுதப்படும்
  • சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  •  பூவிருந்தவல்லி அருகே அரசு தனியார் பங்களிப்புடன் புதிய, நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு
  • ரூ. 2500 கோடியில் சாலை மேம்பாடு
  • நகர்ப்புறங்களில் 4,448 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ. 2500 கோடி நிதி ஒதுக்கப்படும்: தங்கம் தென்னரசு
  • ரூ. 1500 கோடியில் அடையாறு சீரமைக்கப்படும்
  • மதுரை, சேலம் மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • அடையாறை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
  • ரூ. 1500 கோடியில் அடையாறை மீட்டெடுக்க புதிய திட்டம்: தங்கம் தென்னரசு
  • அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவை சீரமைக்கப்படும்: தங்கம் தென்னரசு
  • நதிகளை புனரமைக்க திட்டம்
  • வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம்: தங்கம் தென்னரசு
  • கோவையில் நதிகளை சீரமைக்க ரூ. 5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்: தங்கம் தென்னரசு
  • சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமை திட்டம் அறிமுகம்: தங்கம் தென்னரசு
  • மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை: தங்கம் தென்னரசு
  • நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி விரைவில் நிறைவடையும்: தங்கம் தென்னரசு
  • ரூ. 7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: தங்கம் தென்னரசு
  • 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
  • நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூருக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிமுகம்: தங்கம் தென்னரசு
  • நாமக்கல்லுக்கு ரூ. 350 கோடி, திண்டுக்கல்லுக்கு ரூ. 565 கோடி, பெரம்பலூருக்கு ரூ. 366 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • மகளிர் உரிமை திட்டத்துக்கு ரூ. 13720 கோடி
  • 1 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயன் பெற மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 13720 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • மகளிர் இலவச பேருந்து திட்டம் விரிவு
  • நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம்: தங்கம் தென்னரசு
  • அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நிதி
  • புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்
  • வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவு படுத்த ரூ. 360 கோடி ஒதுக்கீடு
  • காலை உணவு திட்டம் விரிவாக்கம்
  • முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மேலும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்த ரூ. 600 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 3123 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு
  • 10000 புதிய சுய உதவிக் குழுக்கள்
  • வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்
  • சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு
  • கோவை, மதுரையில் 3 மகளிர் தங்கும் விடுதிகள்
  • கோவை, மதுரையில் ரூ. 26 கோடியில் 3 புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும்
  • தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்க திட்டம்
  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச் சத்து வழங்கும் திட்டம் அறிமுகம்
  • மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம் இலவசம்
  • மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்விக்கான செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்
  • பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி
  • ரூ. 1000 கோடியில் தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்
  • 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் ரூ. 300 கோடியில் உருவாக்கப்படும்
  • இல்லம் தேடி கல்விக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
  • இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு
  • சமூகப் பாதுகாப்புத் துறை குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம்
  • பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,042 கோடி ஒதுக்கீடு
  • தொழில் படிப்பு மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு ஏற்கும் வகையில் ரூ. 511 கோடி ஒதுக்கீடு
  • கோவையில் கருணாநிதி பெயரில் நூலகம்
  • கோவையில் கருணாநிதி பெயரில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும்
  • உயர்கல்வித் துறைக்கு ரூ. 8212 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ. 8212 கோடி நிதி ஒதுக்கீடு
  • தொழிற்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக்குகள் உயர்த்தப்படும்
  • கோவையில் புதிய ஐ.டி. பூங்கா
  • கோவையில் ரூ. 1000 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
  • தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
  • குடிமைப் பணி, வங்கி உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்ப் புதல்வன் புதிய திட்டம் அறிமுகம்
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம்
  • 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று கல்லூரி செல்லும் 3 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000
  • தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு
  • image
  • நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி
  • மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • image
  • விளையாட்டுத் துறைக்கு ரூ. 440 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு
  •  ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம்
  • ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்
  • 10 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்
  • ரூ. 111 கோடியில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
  • 1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன்
  • 1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ரூ. 2500 கோடி ஒதுக்கீடு
  • 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள்
  • தமிழகத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்
  • மக்களை தேடி மருத்துவத்துக்கு ரூ. 843 கோடி
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ. 843 கோடி ஒதுக்கீடு
  • நம்மை காக்கும் 48 திட்டத்துக்கான மருத்துவ செலவுத் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • தஞ்சை செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா
  • தஞ்சை செங்கிப்பட்டியில் ரூ. 120 கோடியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்
  • புற்றுநோய் சிகிச்சைக்கு மேலாண்மை இயக்கம்
  • தமிழகத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்
  • மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 333 கோடி
  • மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • பெண் வேலை வாய்ப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் ,
  • 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்
  • பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பெண் தொழிலாளர்களுக்கு 10% ஊதிய மானியம் அரசு வழங்கும்
  • குலசேகரப்பட்டிணத்தில் டிட்கோ பூங்கா
  • குலசேகரப் பட்டிணம் அருகே 2 ஆயிரம் ஏக்கரில் டிட்கோ மூலம் புதிய பூங்கா அமைக்கப்படும்
  • விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்காக்கள்
  • விருதுநகர் மற்றும் சேலத்தில் ரூ. 2,483 கோடியில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்
  • இரு ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்
  • தூத்துக்குடியில் விண்வெளி உந்துசக்தி பூங்கா
  • தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும்
  • தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு 2795 கோடி
  • தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு ரூ. 2795 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • தமிழகத்தில் உலகப் புத்தொழில் மாநாடு
  • தமிழ்நாட்டில் முதன் முறையாக உலகப் புத்தொழில் மாநாடு நடத்தப்படும்
  • மதுரையில் தொழில் புத்தாக்க மையம்
  • மதுரையில் 25,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்
  • சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு 1557 கோடி
  • சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 1557 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • 6 இடங்களில் குறு தொழில் தொகுப்புகள்
  • விருதுநகர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டையில் குறு தொழில் தொகுப்புகள் அமைக்கப்படும்
  • 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை
  • சென்னை. கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிப் பகுதிகளின் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்
  • அரசு இணைய சேவை ரூ. 200 கோடியில் தரம் உயர்த்தப்படும்
  • செயற்கை நுண்ணறிவு இயக்கம் அறிமுகம்
  • முதலமைச்சர் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம் அறிமுகப்படுத்தப்படும்
  • 5 இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள்
  • நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13000 பேருக்கு வேலை
  • தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்
  • நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
  • நீர்வளத்துறைக்கு 8398 கோடி
  • நீர்வளத்துறைக்கு ரூ. 8398 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • மாநிலத் தரவு மையத்தை மேம்படுத்த 200 கோடி
  • அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 200 கோடியில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும்
  • கல்லணைக் கால்வாயை புனரமைக்க 400 கோடி
  • கல்லணை கால்வாயின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக ரூ. 400 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்
  • கல்லணைக் கால்வாய் விரிவாக்கம் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.3 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் மேம்படும்
  • அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க நிதி
  • அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க ரூ. 50 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்
  • 3000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு
  • இந்தாண்டு 500 மின் பேருந்துகள் செயல்படும்
  • தமிழக போக்குவரத்துத் துறைக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு
  • 500 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்
  • image
  • சென்னை மெட்ரோ ரயிலுக்கு 12 ஆயிரம் கோடி
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • மெட்ரோ ரயிலை மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
  • கோயம்பேடு முதல் ஆவடி வரை, பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரை மேலும் 2 விரிவாக்கத் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
  • சென்ட்ரலில் புதிய பல்துறை அலுவலகக் கட்டடம்
  • சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்கு பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டப்படும்
  • பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 688 கோடி ஒதுக்கீடு
  • பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்
  • பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை
  • பழங்குடியினர் பகுதிகளை மேம்படுத்த தொல்குடி திட்டம்
  • ரூ. 1000 கோடியில் தொல்குடித் திட்டம்
  • பழங்குடியினர் வாழ்விடத்தை மேம்படுத்த தொல்குடி திட்டம் ரூ. 1000 கோடியில் செயல்படுத்தப்படும்
  • அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்
  • அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
  • ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ. 3706 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்
  • சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1429 கோடி
  • சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • தமிழக கடற்கரைகளை மேம்படுத்த திட்டம்
  • சென்னை மெரீனா, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம் மரக்காணம், நாகை காமேஸ்வரம், புதுக்கோட்டை கட்டுமாவடி...
  • ராமநாதபுரம் அரியமான், தூத்துக்குடி காயல்பட்டினம், திருநெல்வேலி கோடாவிளை ஆகிய 8 கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 250 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் ஆட்டிஸம் மையம்
  • ரூ. 25 கோடியில் சென்னையில் ஆட்டிஸம் மையம் அமைக்கப்படும்
  • ஆயிரமாண்டு பழைய கோயில்கள் புனரமைப்பு
  • ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு
  • மாவட்டந்தோறும் சுற்றுலா வளர்ச்சி குழுமம்
  • சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் தலைமையில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும்
  • தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த நிதி
  • தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இனப்பெருக்க மையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
  • மீனவர்களுக்கு வசதி செய்து தர 450 கோடி
  • குமரி, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரத்தில் தூண்டில் வளைவு, மீன் இறங்கு தளம் அமைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு
  • 3 மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள்
  • கரூர், ஈரோடு, விருதுநகரில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள் நிறுவப்படும்
  • சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்துக்கு நிதி
  • ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு ரூ. 60 கோடியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்
  • கைத்தறி, கைவினை பொருள் விற்பனை வளாகம்
  • தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருட்களை விற்க சென்னையில் வணிக வளாகம்
  • 4 லட்சம் சதுர அடியில் அமையும் வணிக வளாகத்துக்கு ரூ. 227 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • முட்டுக்காட்டில் பன்னாட்டு அரங்கம்
  • சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும்
  • 3 லட்சம் சதுர அடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்
  • புராதன கட்டடங்களை புனரமைக்க 50 கோடி
  • புராதன கட்டடங்களை பழமை மாறாமல் புனரமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு
  • சாலை மேம்பாட்டுக்கு 665 கோடி
  • முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ. 665 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • 14 நகரங்களில் புறவழிச் சாலைகள்
  • ரூ. 665 கோடியில் 14 நகரங்களில் புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை
  • திருச்சி - ஸ்ரீரங்கம் உயர்மட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்
  • திருவான்மியூர் - உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு வழி உயர் மட்ட வழித்தடம் அமைக்க ஆய்வு
  • திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப் கார்
  • திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்
  • 10000 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
  • வரும் ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
  • 2 ஆண்டுகளில் 50000 இளைஞர்களுக்கு அரசு வேலை
  • அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகள் வழங்கப்படும்
  • திருவெறும்பூரில் நவீன சிறைச்சாலை
  • திருச்சி திருவெறும்பூரில் ரூ. 104 கோடியில் நவீன சிறைச்சாலை கட்டப்படும்
  • மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க நடவடிக்கை
  • தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு நடப்புக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்
  • 1400 புதிய மழைமானிகளை நிறுவ நடவடிக்கை
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1400 புதிய மழைமானிகளை நிறுவ நடவடிக்கை
  • ராமநாதபுரம் மற்றும் ஏற்காட்டில் ரூ. 56 கோடியில் புதிய வானிலை ரேடார் கருவிகள் அமைக்கப்படும்
  • வெள்ளம் புயலை கண்காணிக்க தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும்
  • சென்னை, நாகையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம்
  • சென்னை மற்றும் நாகப்பட்டிணத்தில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்
  • தஞ்சை மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம்
  • தஞ்சை மனோரா பகுதியில் கடல் பசு பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும்
  • எண்ணூர் கடற்கரையை சீரமைக்க 40 கோடி
  • சென்னையை அடுத்துள்ள எண்ணூர் கடற்கரையை சீரமைக்க ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • பத்திரப்பதிவுத் துறையை நவீனப்படுத்த நிதி
  • பத்திரப்பதிவுத் துறையை நவீனப்படுத்த ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு
  • பேரிடர்களால் சிக்கலில் நிதி நிலை
  • பேரிடர்களுக்கு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை
  • மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 9000 கோடி கூடுதல் செலவு
  • மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்பு
  • வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு
  • வருவாய் பற்றாக்குறை ரூ. 44,907 கோடியாக அதிகரிப்பு
  • நிதிப் பற்றாக்குறை ரூ. 94,060 கோடியாக அதிகரிப்பு
  • நிதிப்பற்றாக்குறை ரூ. 94,060 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு
  • சொந்த வரி வருவாய் ரூ. 1,95,173 கோடி
  • வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 1,95,173 கோடியாக இருக்கும் என மதிப்பீடு
     

Trending News

Latest News

You May Like