1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் : கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா..!

1

2024-25 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று (பிப்.19) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இன்று காலை 10 மணி அளவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய தொடங்கினார்.அதில் முக்கிய திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

பெண்களின் உயர்கல்விக்கு உதவும் புதுமை பெண் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் 

முதலமைச்சரின் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40 % இருந்து 65% உயர்ந்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் விரிவாக்கமாக மலைப் பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில், நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 29 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு 1.19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கோவையில் மாபெரும் நூலகம் கலைஞர் பெயரில் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் 435 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் 

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நிதி ஒதுக்க செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரூ.111 கோடி செலவில் 10 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
  • நாமக்கலில் ரூ.358 கோடி, திண்டுக்கல்லில் ரூ.565 கோடி, பெரம்பலூரில் ரூ.366 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு
  • புதுமைப்பெண் திட்டத்துக்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
  • தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.
  • ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
  • கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
  • கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
  • விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.1,000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
  • 5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.
  • சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும்.
  • நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நான் முதல்வர் திட்டத்தில் 100 கலை, பொறியியல் கல்லூரிகளில் ரூ.200 கோடிக்கு திறன் ஆய்வகங்கள்.
  • மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
  • ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
  • புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.
  • தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். 
  • சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி நிதி ஒதுக்கீடு
  • சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் 1,000 நபர்களுக்கு ஆறு மாத உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.
  • குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
  • தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும்
  • மதுரையில் 25,00 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்.
  • கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
  • முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமைக்கப்படும்.
  • பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்கப்படும்.
  • மருத்துவத் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 4 நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும்.
  • மதுரையில் ரூ.345 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
  • திருச்சியில் ரூ.350 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.
  • பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ.1,000 கோடி செலவில் தொல்குடி என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

Trending News

Latest News

You May Like