தமிழக பாஜக தலைவர் கையில் ரெண்டு வாட்ச்.. பிடிஆரை காப்பி அடிக்கிறாரா அண்ணாமலை..?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது கைகளில் இரண்டு வாட்ச் கட்டி இருப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதேபோல, தனது சட்டைப் பையில் 4 பேனாக்களும், இரண்டு லேப்டாப்களையும் பழனிவேல் தியாகராஜன் வைத்திருப்பார். இந்நிலையில், இதனை காரணமாக வைத்து பாஜக ஆதரவாளர்கள் சிலர் அவரது போட்டாவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கிண்டல் அடித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்ட போது அதற்கான காரணத்தை கூறியிருந்தார் பிடிஆர். அவர் கூறுகையில், "என் பாக்கெட்டில் 4 பேனாக்கள் இருக்கும். பட்ஜெட் தயாரிக்கும் போது பல்வேறு கோப்புகளை வேறுப்படுத்துவதற்காக இந்த 4 கலர் பேனாக்களை பயன்படுத்துவேன். அதேபோல, இரண்டு வாட்ச் கட்சி இருக்கிறேன். ஒரு கையில் கட்டியிருப்பது ஃபிட்பிட் வாட்சி. இது எனது இயத்துடிப்பு, எவ்வளவு தூரம் நடந்திருக்கிறேன், எவ்வளவு படிகளை ஏறி இருக்கிறேன் என்பதை துல்லியமாக கூறும்.மற்றொரு கையில் இருப்பது எனது தாத்தா பிடிஆர், என் அப்பாவிற்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச். 30 வருடங்களுக்கு முன்பு இந்த வாட்ச்சை என் தாத்தா என் அப்பாவிற்கு கொடுத்தார். சில வருடங்களில் அந்த வாட்ச் ஓடாததால், நான் அமெரிக்கா செல்லும் போது அதை எடுத்துச் சென்று சரி செய்தேன். பின்னர் அன்று முதல் எனது தாத்தா நினைவாக இந்த வாட்ச்சை அணிகிறேன்" என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய அண்ணாமலையின் கையிலும் இரண்டு வாட்ச்கள் கட்டப்பட்டிருந்தன. அதை பார்த்த நிருபர்கள், "என்ன சார் கையில ரெண்டு வாட்ச் கட்டிருக்கீங்க. பிடிஆர் இல்லாத குறையை நிவர்த்தி பண்றீங்களாண்ண" எனக் கிண்டலாக கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "ஆமாண்ணே.. பாருங்க ரெண்டு வாட்ச் கட்டிருக்கேன். ஆனால் ஒரு வாட்ச் தாண்ணே. ஒரு வாட்ச் நம்ம கரெக்டா தண்ணிய குடிக்கிறோமோனு பார்த்து செக் பண்ணி நமக்கு சிக்னல் கொடுக்கும். இன்னொரு வாட்ச் சாதாரண டைம் வாட்ச்சுங்கண்ணா. ஆனால் பிடிஆர் அப்படி இல்ல. அவர் கட்டி இருப்பது ரெண்டுமே டைம் வாச்" எனக் கூறினார்.