தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்..!
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 3-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இதற்காக இன்று அண்ணாமலை டெல்லி செல்கிறார். அதன்படி, கோவை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.