#BREAKING : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி..!
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை இராமச்சந்திரன், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
காலையில் இருந்தே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருந்து வந்தார். தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,64,128 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அ.தி.மு.க-வின் சிங்கை ராமச்சந்திரன் 1,15,415 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கலாமணி 60,432 வாக்குகள் பெற்றுள்ளார்.
சற்றுமுன் வந்த தகவலின்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் தோல்வி அடைந்துள்ளார்.
கோயம்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5.22 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி; பாஜகவின் அண்ணாமலை 4.25 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி