1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு..!

1

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம், குவைத் தீ விபத்து சம்பத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சட்டசபைக் கூட்டத்தில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வந்தது.இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் சட்டசபையில் கடுமையாக எதிரொலித்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 4 நாட்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து கடந்த 26 ஆம் தேதி அன்று சபாநாயகர் உத்தரவிட்டார்.

இன்று தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றினார்.

இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

Trending News

Latest News

You May Like