1. Home
  2. தமிழ்நாடு

ரஜினியுடன் கூட்டணி! மனம் திறந்தார் அமித் ஷா !

ரஜினியுடன் கூட்டணி! மனம் திறந்தார் அமித் ஷா !


தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மனம் திறந்து பேசியுள்ளார்.

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், ஒரு பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு நேர்காணல் அளித்தார். அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, வேளாண் சட்டம், பீகார் தேர்தல், சீனா எல்லை பிரச்சனை என பலவற்றிக்கும் தெளிவான விளக்கம் அளித்தார். இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கியுள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரண்டு தேர்தல்களைச் வெற்றிகரமாக சந்தித்துள்ளோம். எனவே, இந்த தேர்தல் எங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுக்கும். தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் முடிவு எடுப்பதற்கு இன்னும் நேரம் காலம் உள்ளது. மேலும், அரசியலில் வருவது ரஜினிகாந்த் இன்னும் உறுதியான முடிவு செய்யவில்லை என்றும், தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம். குறிப்பாக, ரஜினியின் கருத்து பலவும் பாஜகவின் கருத்தாவே உள்ளது என சூசகமாக தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கிருஷ்ணன், அர்ஜுனன் என்று ரஜினி புகழ்ந்திருந்தார்.

எனவே, ரஜினியின் கடைக்கண் பார்வை பாஜக மீதும், பாஜகவின் அன்பு பார்வை ரஜினியின் மீதே உள்ளது. தேர்தல் நேரத்தில் பார்வைகள் பலப்படும் என்றே தெரிகிறது.

Trending News

Latest News

You May Like