1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பள்ளிகளின் காலாண்டு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு..!

1

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியில்,"கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

அதன்பின் அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24-ல் தொடங்கி ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17-ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.

பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 27-ம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 28-ம் தேதி முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாட்கள் 220 ஆக இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இல்லை.

Trending News

Latest News

You May Like