“தமிழகத்தில் 3ஆவது மொழியை கற்க கட்டாயப்படுத்தக்கூடாது” : அமைச்சர் அதிரடி!!

தமிழகத்தில் 3ஆவது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி ,சங்க காலத்தில் பெண் புலவர்கள் அதிக அளவு இருந்தனர். தற்பொழுது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்க தொடங்கியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர். சங்க காலம் மீண்டும் திரும்புகிறது என கூறினார்.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது இரு மொழிக் கொள்கைக்கு ஆளுநரும் ஆதரவு அளிக்க வேண்டும்.மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்று கொள்ளலாம், ஆனால் மூன்றாவது மொழி கற்க கட்டாயப்படுத்த கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in