ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் படம் ..!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் படம் ..!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் படம் ..!
X

தமிழ் சினிமாவில் கமர்ஷியலாக பல படங்கள் வந்து சாதித்துக் கொண்டு இருந்தாலும். கலைரீதியான தனித்துவமிக்க சில படங்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் "சுயம்வரம்" என்ற திரைப்படம் 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு ஒரு உலக சாதனையை படைத்தது. அந்த வகையில் ஒரு திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது "டிராமா" என்ற திரைப்படம்.

பலவகைப்பட்ட விளம்பரங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அஜு.அவருடைய டீமுடன் ஆடுகளம் கிஷோர்,சார்லி,வின்சென்ட்,நகுலன் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க ஒரு திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடித்திருக்கிறார்கள்.

கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆம் இந்த செய்தி உண்மைதான் கிட்டத்தட்ட 180 நாட்கள் ஒத்திகை பிறகு பக்காவாக திரைப்படத்தை எடுக்க முயற்சித்து தற்போது அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

இன்றுவரையில் உலகத்தில் எந்த ஒரு திரைப்படமும் இப்படி வெளியாகவே இல்லை. எனவே இந்தத் திரைப்படம் வெளியாகி உலக அளவில் ஒரு நல்ல பெயரையும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it