1. Home
  2. தமிழ்நாடு

தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் : உலக நாயகன் பிறந்த தினம் இன்று..!

1

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், இப்போது முழுமையான இந்திய நடிகர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட6 மொழிகளில் 233 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 40 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், தெலுங்கு, இந்தியிலும் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த,‘மரோ சரித்ரா’, ‘சாகர சங்கமம்’, ‘சுவாதி முத்யம்’ ஆகிய படங்கள் அவரை அங்கு முக்கியநடிகராக உயர்த்தின. ‘ஏக் துஜே கே லியே’, ‘சத்மா’, ‘சாகர்’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டிலும் முக்கியத்துவம் பெற்றார். கன்னடம் மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.

பத்மபூஷன், 4 தேசிய விருதுகள் உட்படபல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமல்ஹாசன், தமிழ்த் திரைத்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘குருதிப்புனலில்’ டால்பி ஸ்டீரியோ சவுண்ட் தொழில்நுட்பம், ‘மும்பை எக்ஸ்பிரஸில் டிஜிட்டல் வடிவம், ‘விஸ்வரூபம்’ படத்தில் அதிநவீன ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் உட்பட பலவற்றை தனது படங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் நடிகர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த வயதிலும், இளைஞர்களுக்கு நிகராக தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவை கடந்து நற்பணி மன்றம் வாயிலாக மக்களுக்கு உதவிகள் செய்து வந்த கமல்ஹாசன், சில ஆண்டுகளுக்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கமல்ஹாசன் பிறந்தநாளை ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like