தமிழ் நடிகர் ஜி.சீனிவாசன் தீடீர் மரணம்..!

முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீராகவேந்திரா, மனிதன், ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா, வேங்கை உள்ளிட்ட தமிழ் படங்கள் உள்பட தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்கொண்ட ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
இவரது மனைவி புலியூர் சரோஜா பிரபல நடன இயக்குநராக இருந்தவர். இவர்களின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிவரையில், அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.