1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தமிழ் நடிகருக்கு புற்றுநோய்..!

Q

கே. பாலச்சந்தரின் காதல் நாடகப் படமான ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷிஹான் ஹுசைனி.

வேலைக்காரன்', 'பத்ரி' போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர் கராத்தே மாஸ்டராகவும் உள்ளார்.பத்ரி திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் இவர் விஜய்யின் உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார் மற்றும் ‘டிராவலிங் சோல்ஜர்’ பாடலை உருவாக்குவதிலும் பணியாற்றி இருந்தார். அதோடு இவர், நடிகர்கள் விஜய் மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு கராத்தே பயிற்சியையும் அளித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சிகான் உசேனி தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக கூறியிருக்கிறார். அதில், என்னை சுற்றி இருப்பவர்களும் என்னுடைய மாணவர்களும் எனக்கு இந்த நோய் வந்திருக்கு என்று வருத்தப்படவில்லை. அவர்கள் நான் எல்லா தடைகளையும் தாண்டி வருவேன் என்று நம்புகிறார்கள். எனக்கு குழந்தைகள் இல்லை. தாயும் இல்லை. எனது மாணவர்கள்தான் என்னை இதுவரை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.

நான் மக்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் சாவை பார்த்து யாரும் பயப்படக்கூடாது. நேருக்கு நேரா சண்டை போடணும். சாவை சவால் விட வேண்டும். ஒருவேளை இறந்துவிட்டால், அதைக் கொண்டாட வேண்டும். இதையெல்லாம் பார்த்து அசரக்கூடிய ஆட்கள் நானும் என்னுடைய மாணவர்களும் கிடையவே கிடையாது. என்னை பொறுத்தவரை சாவு என்பது முடிவே கிடையாது. சாவு என்பது ஒரு டெசிஷன்தான். என்னுடைய ஒரே ஒரு கனவு என்ன என்றால் தமிழ்நாட்டை சேர்ந்த என்னுடைய மாணவன் இல்ல மாணவி ஒலிம்பிக் மெடலை வாங்க வேண்டும்.

அதற்காக நான் கட்டி வைத்த இந்த கலை மாளிகையை, உடனடியாக விற்று அந்தப் பணத்தை எல்லாவற்றையும் 8 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்று வரும் என்னுடைய மாணவிகள் ஒலிம்பிக் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே ஆசை. இந்த இடம் ஒரு சரித்திர கோயில். என்னுடைய மாணவன் கல்யாண் குமார். அவனுக்கு பவன் கல்யாண் என்ற பெயரை நான் தான் வைத்தேன். அவர் என்கிட்ட ஒன்றரை வருடங்கள் ட்ரைனிங் எடுத்துக்கிட்டாரு.

துணை முதல்வர் முடிந்தால் நீங்களே இந்த பில்டிங்கை 11 கோடி ரூபாய்க்கு வாங்கி இதை ஒரு கலைக்கோயிலாக மாற்ற வேண்டும். அதே மாதிரி விஜய்யும் என்னிடம் பத்ரி படத்திற்காக கராத்தே கற்றுக் கொண்டார். அந்தப் படத்தில் அவர் கை மேல் கார் ஏறியது எல்லாம் உண்மைதான். அவருக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனை உருவாக்க வேண்டும் என்று சிகான் உசேனிஅந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் விரைவில குணமாக வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like