1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தமிழ் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு..!

Q

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. "ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடன் கேரவேனில் ஆசைக்கு இணங்க ₹2 லட்சமும், பாலியல் விருப்பங்களுக்கு ₹50,000 கொடுத்துவிட்டு, சமூக ஊடகங்களில் புனிதராக நடிக்கிறார்" என ரம்யா மோகன் என்ற பெயரில் Xல் பதிவிடப்பட்டுள்ளது.
"அப்பெண் தற்போது மறுவாழ்வு மையத்தில் உள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பதிவில், “கோலிவுட்டின் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கேஸ்டிங் கவுச் (casting couch - சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதைக் குறிப்பிடும் சொல்லாடல்) கலாசாரம் விளையாட்டானது அல்ல. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் (ஊடக வெளிச்சம் கொண்டவர்) இந்த உலகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தற்போது, மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார். தொழில்துறை விதிமுறை என்கிற பெயரில் போதைப்பொருள், சூழ்ச்சி, பரிவர்த்தனை சுரண்டல்களே நடக்கின்றன.
அப்பெண்ணுக்கு, தன்னுடன் கேரவேனில் ஆசைக்கு இணங்க ரூ. 2 லட்சமும் பாலியல் விருப்பங்களுக்கு ரூ. 50 ஆயிரமும் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி, சமூக ஊடகங்களில் புனிதராக நடிக்கிறார். இவர் அப்பெண்ணைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தினார். இப்படித்தான் இங்கு பலருடைய கதையும் இருக்கிறது. ஆனால், சமூக வலைதளங்களில் ஆண்களைப் புனிதர்களாக வணங்குகின்றனர். போதைப்பொருளும் பாலியல் தொடர்பும் உண்மையானதுதான். விளையாட்டல!” எனப் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த, ஆதாரம் இல்லாமல் பதிவிடுவது வைரலாகத்தானே என ரம்யா மோகனைக் கேள்வி கேட்டனர்.
அதற்கு ரம்யா, “சில உணர்ச்சியற்ற முட்டாள்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை விட, ஆதாரத்தைக் கேள்வி கேட்பதிலும் பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதிலும் அதிக கவனம் செலுத்துவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நாள்குறிப்பையும் தொலைபேசி உரையாடல்களையும் பார்த்தபோது இந்த உண்மை அவர் குடும்பத்தைப் புயல்போல தாக்கியது. இது வெறும் கதை இல்லை. இது அவளுடைய வாழ்க்கை, அவளுடைய வலி...” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இப்பதிவு வைரலாகி வருகிறது. 
Q

Trending News

Latest News

You May Like