1. Home
  2. தமிழ்நாடு

சிக்கிமில் மீண்டும் தமாங் முதல்வராகிறார்...அருணாச்சலில் பா.ஜ., ஆட்சி..!

Q

அருணாச்சலில் காங்கிரஸ், பா.ஜ.,, என்.பி.பி., மற்றும் சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ( எஸ்.கே.எம்.) , எல்.டி.எப்., பா.ஜ., உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகிறது.

அருணாச்சலில், பாஜக 60 தொகுதிகளிலும், காங்., 34 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில், அம்மாநில முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில், பாஜகவே முன்னிலையில் உள்ளது.

அருணாச்சலில் பா.ஜ., 27, என்.பி.பி., 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
சிக்கிமில், எஸ்.கே.எம்.,-26, எஸ்.டி.எப்., - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இங்கு பிரேம்சிங்தமாங் மீண்டும் முதல்வராகிறார்..

Trending News

Latest News

You May Like