1. Home
  2. தமிழ்நாடு

குடை எடுத்துட்டு போங்க..! இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

1

தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது என்றும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரெஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனியில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like