இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..! நாளை 7 மாவட்டங்களில் "மருத்துவ முகாம்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலை தொடர்ந்து நாளை 7 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்," சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதில் சென்னையில் மட்டும் 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது