1. Home
  2. தமிழ்நாடு

வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..! இன்று முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு!

1

அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் அவசியம் தேவைப்படுகிறது.ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலருக்கு ஆதார் எண் இல்லை. 

இதனால் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இது தொடர்பாக, சென்னை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை இன்று முதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், டிபிடி (DBT) முறையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு பள்ளிக் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தத் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like