நோட் பண்ணுங்க மக்களே ..! நாளை மின்சார ரயில்கள் ரத்து..!
மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் பலர் இந்த மின்சார ரயில் சேவையைத் தான் நம்பியிருக்கிறார்கள். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும்.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பராமரிப்பு பணிகளும் நடைபெறும். பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17 ஆம் தேதி தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை வரும் நவம்பர் 17 ஆம் தேதி ரத்து செய்யபட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த நேரத்தில் கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கவுள்ளது. எனவே, இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.