1. Home
  2. தமிழ்நாடு

மக்களே நோட் பண்ணுங்க..! வெறும் 100 ரூபாய்க்கு ஹோட்டல் ரூம்..!

W

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும் வெளியூரில் ஓட்டல் அறையில் தங்கி அதிகாலையில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புவார்கள்.
ஆனால் திருச்செந்தூரில் ஓட்டல் அறை கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. இரவோடு இரவாகச் சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக 100 ரூபாய்க்கு ஓட்டல் அறையில் தங்கும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக ராமேஸ்வரத்தில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக யாத்ரி நிவாஸ் விடுதி கட்டப்பட்டது. வருகிற நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற விழாக்களுள் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா நடைபெறவுள்ளது.
சூரசம்ஹாரம், நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே யாத்ரி நிவாஸ் திறக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.

Trending News

Latest News

You May Like