1. Home
  2. தமிழ்நாடு

அக்னி தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து வழிபாடு..!

1

இன்று (ஆகஸ்ட் 16) ஆடி அமாவாசையையொட்டி, நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்துள்ளதால் சிறப்பு வாய்ந்ததாக கருதும் பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். ராமேஸ்வரம் கடற்கரையில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. இன்று இரண்டாவது ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்த கோயிலில் மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், சூரிய பகவானை வழிபட்டும் வருகின்றனர்.

ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளதால், அங்கு கடும் வாகனம் நெரிசல் நிலவுகிறது. 300- க்கு திதி கொடுத்து வழிபடுவதற்காக, அங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அதிக அளவில் திரண்டுள்ளனர்.

அதிகாலை முதலே அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி திதி கொடுத்து, வழிபாடு செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துக் கொண்டே இருப்பதால், ராமேஸ்வரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

கூட்டம் அதிகளவில் இருப்பதால் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை வைத்து காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like