1. Home
  2. தமிழ்நாடு

ஸ்விக்கி,பளிங்கிட் உடை அணிந்து நகைக்கடையில் கொள்ளை..!

1

உ.பி காசியாபாத்  நகைக்கடையில் நேற்று பிற்பகல்  அதிரடி கொள்ளை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் போல் மாறுவேடம் போட்ட இருவர், ஹெல்மெட் அணிந்து கடையில் நுழைகின்றனர். 

இவர்கள்  நகைகளை எடுத்துவைத்து பைகளில் நிரப்பிய பிறகு, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.  இந்த சம்பவத்தின் முழு காட்சி கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் கொள்ளை சம்பவத்தில்  சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  கண்முன்னே நடந்த இந்த கொள்ளை சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சி தரும் வீடியோவுடன் பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் அதிக  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like