1. Home
  2. தமிழ்நாடு

பயனாளிகளுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்..! இனி உங்களுக்கு ரூ.1000 இல்ல இனி ரூ.1500..!

1

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த வியூகங்கள் கட்சிகளால் வகுக்கப்பட்டு வரும் நிலையில் திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்ட தவணை தொகையை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக பெண்கள் யாரையும் சார்ந்திருக்க கூடாது, அவர்களது உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழ்நாட்டை பின் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லி இத்திட்டத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிற்கு பின்னர் இத்திட்டத்தை தொடங்கிய மாநிலங்களில் கர்நாடகாவில் 2000 ரூபாயும், தெலங்கானாவில் 2500 ரூபாயும், மகாராஷ்டிரா 1500 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு டெல்லியில் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயனாளர்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

புதிதாக திருமணமாகியவர்கள், புதிய ரேஷன் அட்டைதாரர்கள், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் என பலரும் திட்டத்தில் இணைய ஆவலாக உள்ளனர். இந்த சூழலில் பயனாளிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் உரிமைத் தொகை அளவும் அதிகரிக்க உள்ளதாக கோட்டை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் களம் என்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடாது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, ஆட்சி மீதான அதிருப்தி ஆகியவை திமுகவுக்கு எதிரான சூழலை உருவாக்கும். இதை சமாளிக்க மீண்டும் மகளிர் உரிமைத் தொகையையே திமுக கையில் எடுக்க உள்ளது.

தேர்தலுக்கு முன்பாக பயனாளர்களின் எண்ணிக்கையில் ஓரிரு லட்சங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், உரிமைத் தொகையை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் என உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

Trending News

Latest News

You May Like