பள்ளிகளில் சக்கரைப் பொங்கல்..!!

மாநிலம் முழுவதும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் பல மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் இன்று இனிப்புப் பொங்கல் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் கடந்த ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று மாநிலத்தில் பள்ளிகள் எதுவும் திறக்கப்படாமல் போய்விட்டது. இதையடுத்து ஆகஸ்டு 14-ம் தேதி தமிழக அரசு மாணவர்களுக்கு பொங்கல் வழங்கும் என்று கூறி இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவாக சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது. முன்னதாக முன்னாள் முதல்வர்களான காமராஜர், அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. ஜெயலலிதா உள்ளிட்டோரின் பிறந்த நாட்களில் சக்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
அதேபோன்று தற்போது கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு சக்கரைப் பொங்கல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.