1. Home
  2. தமிழ்நாடு

ஸ்வாதி மாலிவால் சொல்வது 100% பொய் - ஆம் ஆத்மி விளக்கம்..!

1

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது முதல்வர் இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டினார். டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு புகாரும் அளித்துள்ளார்.. இது தொடர்பாக கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பிபவ் குமார் தன்னை பல முறை அறைந்ததாகவும் வயிற்றிலேயே எட்டி உதைத்ததாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதற்கிடையே ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டிற்கு ஆம் ஆத்மி பதிலளித்துள்ளது. பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மியை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து ஸ்வாதி இவ்வாறு செயல்படுவதாக ஆம் ஆத்மி பதிலளித்துள்ளது.


இதற்கிடையே டெல்லி முதல்வர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 52 நொடிகள் ஓடும் ஸ்வாதி மாலிவாலின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்வாதி மாவிவால் கெஜ்ரிவால் இல்லத்தில் பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் ஸ்வாதியை அங்கிருந்து வெளியேறுமாறு பல முறை சொல்கிறார்கள். இருப்பினும், அங்கிருந்து செல்ல மறுக்கும் ஸ்வாதி அவர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்.

தன்னை எதிர்த்தால் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறுகிறார். மேலும் ஒரு கட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்களைத் தாக்கவும் முற்படுவது போலவே தெரிகிறது. இந்த வீடியோவை ஆம் ஆத்மி கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் பாஜகவே இருப்பதாகவும் சாடி வருகிறார்கள்..

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கெஜ்ரிவாலை குறிவைத்து பாஜக போட்ட திட்டங்களை இது அம்பலப்படுத்துகிறது.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததில் இருந்தே அவரை காலி செய்ய பாஜக சதித்திட்டத்தைத் தீட்டியது. இதன் காரணமாக ஸ்வாதி மாலிவால் மே 13 அன்று காலை அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.அங்கே ஒரு டிராமாவை நடத்தி முதல்வரை அவமதிக்க வேண்டும் என்பதே அவரது திட்டம். ஆனால், முதல்வர் கெஜ்ரிவால் இந்தச் சம்பவம் நடந்த போது அங்கு இல்லை.. இதனால் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜகவின் இந்த சதியின் முகமாக இருப்பவர் தான் ஸ்வாதி மாலிவால்" என்றார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் 52 நொடிகள் ஓடும் அந்த வீடியோவை குறிப்பிட்டு அதிஷி, "இந்த ஒரு வீடியோ போதும் ஸ்வாதி எந்தளவு பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.. போலீசாரிடம் தான் தாக்கப்பட்டதாக ஸ்வாதி புகாரளித்தார். ஆனால், வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அவர் வசதியாக உட்கார்ந்து அதிகாரிகளை அச்சுறுத்துவது தெளிவாகத் தெரிகிறது. அவர் பிபவ் குமாரையும் அதில் அச்சுறுத்துவது தெளிவாகத் தெரிகிறது. தன்னை அடித்து உதைத்தாக எல்லாம் ஸ்வாதி கூறுகிறார். ஆனால், அவருடைய உடைகள் கிழிந்துவிடவில்லை, தலையில் காயம் கூட இல்லை. இதில் இருந்தே அவர் சொல்வது எந்தளவுக்குப் பொய் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

Trending News

Latest News

You May Like