ஓடிடி-யில் வெளியாகும் சுவாதி கொலை வழக்கு திரைப்படம் ..!

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிய ஒரு செய்திதான் சென்னையில் நடந்தது. நுங்கம்பக்கம் ரயில் நிலையத்தில் ஒரு இளைஞர் பெண்ணை சரமாரியாக குத்தி கொன்ற விவகாரம்.
விசாரித்ததில் இருவருக்கும் காதல் பிரச்சனை என தெரியவந்தது. மேலும் சரியான சில காரணங்கள் சொல்லப்பட வில்லை.திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் தான் இந்த கொலை செய்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார். பின்னாட்களில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் உள்ள மின்சார கம்பி தாக்கி உயிரிழந்தார் என வழக்கு முடிக்கப்பட்டது.
இந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இயக்குனர் ரமேஷ் செல்வன் என்பவர் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். தமிழ் திரைப்படத்திற்கு சில சர்ச்சைகளுக்குப் பின்னர் நுங்கம்பக்கம் என பெயரிடப்பட்டது. மேலும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வெளியாகாமல் இருந்தது.
தற்போது அதிகாரப்பூர்வ ஒரு இணையதளத்தில் திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வழக்கில் சொல்லப்படாத விஷயங்களில் திரைக்கதையில் சொல்வார்களா? ஏனெனில் ஏதும் புனைவு கதை உள்ளே இருக்குமா? என தெரியவில்லை. இன்னும் என்னென்ன விஷயங்களை சொல்ல வருகிறார்கள் என்பது குறித்து திரைப்படம் வந்தவுடன் தான் தெரியும்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் 2 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இந்தத் திரைப்படம் ஒடிடி யில் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
newstm.in