1. Home
  2. தமிழ்நாடு

சர்ச்சையில் எஸ்வி சேகர் : மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாச சைகை..?

1

பிரபல நகைச்சுவை நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நாடகத்தில் பெண் பத்திரிகையாளர் போல ஒருவரை நடிக்க வைத்து பத்திரிக்கையாளர்கள் என்றால் ரொம்ப திமிர் பிடித்தவர்கள் என பேசியதோடு, ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் சைகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் எஸ்வி சேகர் செயலுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 201 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார் எஸ்வி சேகர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் எஸ்வி சேகர். கடந்த 27ஆம் தேதி சென்னை நாரத கானா சபாவில் நாடகம் ஒன்று நடைபெற்றது. அதில் அரசியல்வாதி கேரக்டரில் எஸ்வி சேகர் நடித்துள்ளார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் பேட்டி எடுக்க வருவதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது பெண் பத்திரிக்கையாளரை உட்காருங்க என எஸ்.வி சேகர் சொல்ல அங்கு நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என பெண் பத்திரிக்கையாளர் கேரக்டரில் நடித்த பெண் கேட்பார்.

அப்போது தன் தொடையை தட்டி இவ்வளவு இடம் இருக்கிறது.. இந்த பத்திரிகை காரங்களே ரொம்ப திமிரு புடிச்சவங்க.. இவ்வளவு இடம் இருக்கே? இங்க உட்கார கூடாதா? என கேட்டிருப்பார். இந்த நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதோடு தனது தொடையில் உட்கார வேண்டும் என்பது போல் அவர் செய்த சைகை ஆபாசமாகவும் அருவருப்பாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்களும் சமூக வலைதள வாசிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த நிலையில் எஸ்வி சேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்,"பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.


 

Trending News

Latest News

You May Like