1. Home
  2. தமிழ்நாடு

இனி பஸ் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்..!

W

சமீப காலமாக அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பயன்படுத்திக் கொண்டே, பஸ் ஓட்டும் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தது.

அதுமட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 'அரசு பஸ் டிரைவர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்' என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது டிரைவர்கள் பஸ் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தி வரும் வீடியோக்கள் இணையத்தில், வைரலாகி வருகிறது. இதனால் இந்த உத்தரவை, அனைத்து நோட்டீஸ் போர்டுகளிலும் குறிப்பிடும் படி, இன்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு, டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like