சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தமிழ் சீரியல் ரீமேக்! எந்த நாடகம் தெரியுமா?

பொதுவாக இந்தியில் இருந்து தான் தமிழுக்கு சீரியல் ரீமேக், டப்பிங் செய்யப்படும். ஆனால் தமிழில் இருந்து ஒரு சீரியல் ஹிந்திக்கு ரீமேக் ஆகியிருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் நாடகம் தான் ஹிந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புத்(sushant singh rajput) நடித்த பவித்ரா ரீஸ்தா. டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் சுஷாந்த் சிங். சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி நாட்டையே உலுக்கியது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் பிரஷர் தாங்க முடியாமல் தூக்குப் போட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும் சீரியல்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் தான் இருப்பார்கள். அந்த வகையில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து நல்ல பெயரும் புகழும் பெற்றவர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத். தமிழ் சீரியல் ஆன திருமதி செல்வம் பதிப்பின் ஹிந்தி ரீமேக்கில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர்களை பெற்றார். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.
newstm.in