1. Home
  2. தமிழ்நாடு

சூர்யகுமார் யாதவ்வின் சரவெடி ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி..!

1

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .இன்று நடைபெற்ற 55 ஆவது லீக் போட்டியில் SRH – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பேட் கம்மனிங்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார் .இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடுமையான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அபிஷேக் 11 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்து வந்த வீரர்களை அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மட்டும் தனி ஆளாக அணிக்கு தேவையை ரன்களை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

சிறப்பாக விளையாடிய ஹெட் அரைசதம் கடந்து அசத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்களும் மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணற இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 173 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது மும்பை அணி விளையாடியது.

174 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. 31 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இஷான் கிஷன் 9 ரன்கள், ரோஹித் யாதவ் 4 ரன்கள், நமன் திர் பூஜ்ஜியம் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா 31 ரன்களில் 174 ரன்கள் இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர்.திலக் வர்மா கிடைக்கிற பந்துகளை மட்டும் விளையாடி பொறுமை காக்க மறுபுறம் இருந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியை கையாண்டார். சன்ரைசர்ஸ் அணி பவுலர்களை யாரையும் விட்டுவைக்காத அவர், பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி 51 பந்துகளில் சதம் அடித்தார். அவரின் சதத்துடன் மும்பை அணி வெற்றிபெற்றது. திலக் வர்மா 37 ரன்கள் எடுத்தார்.

Trending News

Latest News

You May Like