1. Home
  2. தமிழ்நாடு

சூர்யகுமார் யாதவ் வெறித்தனம்.. ஒரு விக்கெட்டை எடுக்க போராடிய பெங்களூரு.. மும்பை அபார வெற்றி !

சூர்யகுமார் யாதவ் வெறித்தனம்.. ஒரு விக்கெட்டை எடுக்க போராடிய பெங்களூரு.. மும்பை அபார வெற்றி !


ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் போட்டி அபு தாபியில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சூர்யகுமார் யாதவ் வெறித்தனம்.. ஒரு விக்கெட்டை எடுக்க போராடிய பெங்களூரு.. மும்பை அபார வெற்றி !

இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 15 ரன்னிலும், ஷிவம் டுபே 2 ரன்னிலும் வெளியேறினர்.

மறுமுனையில் நிலைத்து ஆடிய தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ரன்கள் அடிக்க பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. குர்கீரத் சிங் மான் 14 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சூர்யகுமார் யாதவ் வெறித்தனம்.. ஒரு விக்கெட்டை எடுக்க போராடிய பெங்களூரு.. மும்பை அபார வெற்றி !

மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

ஓரளவுக்கு சிறப்பான தொடக்கத்தை இருவரும் ஏற்படுத்தி கொடுத்தனர். 19 பந்துகளில் 18 எடுத்த நிலையில் டிகாக்கும், 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் வெளியேறினர். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சவ்ரவ் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார். எதிர்முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.

ஒற்றை ஆளாக நின்று வெற்றிக்கு போராடினார். அவரது விக்கெட்டை வீழ்த்த பெங்களூரு அணி வீரர்கள் எவ்வளவு போராடியும் முடியாமல் போனது. இதனால் இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

newstm.in

Trending News

Latest News

You May Like