1. Home
  2. தமிழ்நாடு

ஐ.சி.சி.யின் சிறந்த டி-20 வீரர் சூர்யகுமார்..!

1

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது. 

அதன்படி இந்த விருதுக்கு நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்டு கோட்ஸி, இலங்கையின் தில்சன் மதுஷன்கா, இந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.இந்நிலையில் ஐசிசி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை நியூசிலாந்தின் இளம் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். 

2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது. அதன்படி இந்த விருதுக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி, இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் மற்றும் இலங்கையின் சாமரி அதபத்து ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்நிலையில் ஐசிசி 2023-ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2023ம் ஆண்டில் 14 டி20 போட்டிகளில் ஆடி 700 ரன்கள் மற்றும் 19 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது. அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தை சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்நிலையில் ஐசிசி 2023-ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனும், இந்திய நட்சத்திர வீரருமான சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like