1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜகவினருக்கு செக் மேல் செக் வைக்கும் சூர்யா சிவா..!

1

பாஜகவிலிருந்து கடந்த 20 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்ட சூர்யா சிவா, தொடர்ந்து பாஜக பற்றிய உட்கட்சி விவகாரங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் போட்டு அம்பலப்படுத்தி வருகிறார். கூடவே தமிழிசையை அவர் தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார்.

சில ஆண்டுகள் முன்னதாக பாஜக மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருந்த போது, விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது மகன் 'பாஜக ஒழிக' என்று பின்னால் நின்று சத்தம் போட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. அதை இப்போது எடுத்துப் போட்டு, சூரியா விமர்சித்துள்ளார். 'பாஜக ஒழிக என்று நான் சொல்லவில்லை. அக்கா உங்க பையன் தான் சொல்கிறார் ' அதில் ஜாடையாக விமர்சித்துள்ளார்.

மேலும் ஒரு பதிவில், முக்குலத்தோர் சமுதாயத்தை எதிர்க்கும் பாஜகவைக் கண்டிக்கிறோம் என்று ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் 'பிஜேபியால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைத்து மாபெரும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்" என்றும் மிகக் காட்டமாகக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like