1. Home
  2. தமிழ்நாடு

சாதனை செய்ய காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள் ..!

சாதனை செய்ய காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள் ..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது.

இந்த படத்துடைய டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தோட ட்ரெய்லர் ஒன்று வெளியாக போவதாக படக்குழு அறிவித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களின் படங்கள் மற்றும் பெயர்களை பிரபலப்படுத்துவது ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

அதுமட்டுமின்றி டிரன்டிங் சாதனை என ரசிகர்கள் தங்களுக்குள்ளே போட்டி போட்டு தங்களது நடிகர்கள் உடைய படங்களை புரமோட் செய்து வருவார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா உடைய சூரரைப்போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற அக்டோபர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் அதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாம் இதனால் நடிகர் சூர்யா உடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் உள்ளனர்.

சூரரை போற்று ட்ரெயிலரை அதிகப் பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங் காக்க வலம் வரச்செய்ய வேண்டும் என்று திட்ட வட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகிறது என்பதை நாம் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் வெளியாகிய நாள் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Trending News

Latest News

You May Like