சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்.. வெளியான ரெட்ரோ படத்தின் டீஸர்..!

கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் தீவிரமாக இருக்கின்றார் சூர்யா.
சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்திலும் ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா. இதில் ரெட்ரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மறுபக்கம் சூர்யா 45 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. இப்படம் கார்த்திக் சுப்புராஜின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் காதல் படமாக இருக்குமாம். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் காதல் படத்தை அதுவும் சூர்யாவை வைத்து இயக்குகிறார் என்றதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. கண்டிப்பாக இப்படம் சூர்யாவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ திரைப்படத்தை சூர்யாவிற்கு போட்டு காண்பித்துள்ளாராம். படத்தை பார்த்த சூர்யாவிற்கு படம் ரொம்ப பிடித்துவிட்டதாம்.
படம் பார்த்த பிறகு சூர்யா கார்த்திக் சுப்புராஜை கட்டியணைத்து, நினைத்ததை விட படம் சிறப்பாக இருப்பதாக கூறினாராம்.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் சற்று முன் வெளியானது.