1. Home
  2. தமிழ்நாடு

உயிர் தப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. கொடிய விஷம் தடவிய கடிதத்தால் பரபரப்பு !



அமெரிக்காவின் சர்வவல்லமை அதிகாரம் படைத்தவர் அந்நாட்டின் அதிபர். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் வெள்ளை மாளிகை என்பதால் வெள்ளை மாளிகையை சுற்றிலும் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் கடிதம் ஒன்று வந்தது. கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில் கொடிய விஷம் தடவப்பட்டிருந்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

ரிசின் என்ற கொடிய விஷம் அதில் தடவப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசினை முகர்ந்து பார்த்தாலே மரணத்தை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபருக்கு இந்தவிஷம் தடவிய கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ட்ரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகிறது.

உயிர் தப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. கொடிய விஷம் தடவிய கடிதத்தால் பரபரப்பு !

வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நஞ்சு பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் கடிதம் அனுப்பிய நபர் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like