1. Home
  2. தமிழ்நாடு

ஆச்சர்யம்! பற்களுடன் பிறந்த குழந்தையை ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்!!



பிறக்கும்போதே மூன்று பற்களுடன் பிறந்த அதிசய குழந்தையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.கொளக்குடியை சேர்ந்த பாலமுருகன்நிவேதா தம்பதியருக்கு, 20 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறக்கும்போதே முன் பகுதியில் 3 பற்கள் இருந்தது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அந்த குழந்தையை காண தினந்தோறும் வந்து செல்கின்றனர். இதுகுறித்து பேசிய மக்கள், லட்சத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கும் என்று தெரிவித்தனர். அந்த குழந்தையை பார்த்துவிட்டு வாழ்த்தி செல்வதாக மக்கள் தெரிவித்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like