இறைச்சி வாங்க கடைக்கு சென்ற பெயிண்டர் கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம் !!
புத்தாண்டு பம்பர் லாட்டரியில் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிக்கு 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கேரளாவில் அரசு சார்பிலும் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை ஒட்டி கேரள அரசு 32 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில்) பரிசு தொகை கொண்ட பம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கியது. இந்த கேரளா பம்பர் லொட்டரி டிக்கெட்டுகளின் முடிவு திருவனந்தபுரத்தில் அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
அந்த முடிவுகளின் அடிப்படையில் XG 218582 என்ற எண் வரிசை லாட்டரி சீட்டு முதல் பரிசை தட்டிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கேரள மாநிலம் கோட்டயம் அருகே வசிக்கும் பெயிண்ட் தொழில் செய்யும் சதானந்தன் என்பவர் இந்த லாட்டரி சீட்டை வாங்கியதன் மூலம் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்.
இந்த லாட்டரில் முதல் பரிசாக 32 கோடி அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதாவது காலையில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்ற சதானந்தன் அப்போது லாட்டரி டிக்கெட் வாங்கினார். அடுத்த சில மணி நேரத்தில் மதியம் 12 மணியளவில் அவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெயிண்டராக உள்ள சதானந்தன் இது குறித்து கூறுகையில், எனக்கு நிறைய கடன் உள்ளது. அதை இப்போது அடைப்பேன் மற்றும் தனது குழந்தைகளுக்காக அனைத்தையும் செய்ய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
newstm.in