1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி..! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 920 குறைந்தது!

1

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 115 ரூபாய் குறைந்து, ரூ.6,635-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து, ரூ.53,080-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,529-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 94 ரூபாய் குறைந்து, ரூ.5,435-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold-Price

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 87,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.86,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like