1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி..! தொடர்ந்து ௪வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை..!

Q

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.

அந்த வகையில், தங்கம் விலை கடந்த 4ம் தேதி ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5ம் தேதி கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8.,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்8) மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்பனையாகிறது

Trending News

Latest News

You May Like