1. Home
  2. தமிழ்நாடு

கேரள மக்களுக்காக 50 லட்சம் கொடுத்த சூர்யா குடும்பம்..!

1

கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வயநாடு பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இதில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 180க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணியில் இறங்கி இருக்கிறது தேசிய பேரிடர் மீட்பு குழு. ராணுவ படை, விமானப்படை, தீயணைப்பு படை என அனைவரும் துரிதமாக மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மண்ணுக்கடியில் சிக்கி இருப்பவர்களின் நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இது பற்றிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.அதை பார்க்கும் போதே உயிர் நடுங்குகிறது. எங்கு திரும்பினாலும் கதறல்களும் மரண ஓலங்களும் மனதை கனக்க வைத்துள்ளது. 

இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி நிதியுதவியும் தமிழக காங்கிரஸ் சார்பில் 1 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டது . அதிமுக சார்பாக 1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது 

இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் விக்ரம் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.தற்போது நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like