1. Home
  2. தமிழ்நாடு

கலைஞர் மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை..!!

1

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்தர சிறப்பு மருத்துவமனை என்ற பெயரில் புதிய மருத்துவமனை திறக்கப்பட்டது.240 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மருத்துவமனையானது ஆயிரம் படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 3 கட்டடங்களைக் கொண்ட 52,428 ச.மீ. பரப்பளவுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல் , இருதயவியல் , கதிரியக்கவியல் , நரம்பியல் , நுண்ணுயிரியல் , மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை, அவரச சிகிச்சை, பல்வேறு ஆய்வகம் என்று மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், ரத்தநாளம், புற்றுநோய், ரத்த மாற்று தொடர்பான உயர் சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் கலைஞர் மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிவித்துள்ளார் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 15 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை பெற்றுக் கொள்ள மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like