1. Home
  2. தமிழ்நாடு

உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்..!

Q

அரசு மற்றும் மருத்துவமனை சமூகவலைதளப் பக்கத்தை மர்மநபர்கள் திடீரென ஹேக் செய்வார்கள். இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி பத்திரமாக, மீட்பதை கேள்விப்பட்டு இருப்போம். அதேபோல், தனிநபர் சமூக வலைதளப்பக்கமும் ஹேக் செய்யப்படும் சம்பவம் நடந்திருக்கிறது. அரசியலமைப்பு பெஞ்ச் முன்பு, விசாரணைக்கு வரும் வழக்குகள் யூ.டி.யூப்., பக்கத்தில் நேரடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தேயே மர்மநபர்கள் இன்று (செப்.,20) ஹேக் செய்துள்ளனர். 'ரிப்பிள்' என்ற பெயரில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவை சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்கள் காட்டுகிறது. மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நேரலை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like