1. Home
  2. தமிழ்நாடு

சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..! அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம்…!

1

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, இந்த நாடுகளில் சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்நிலையில், 1966ம் ஆண்டு முதல் 19971ம் ஆண்டுக்கு இடையே வங்கதேசத்திலிருந்து வந்து அசாமில் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. இதை எதிர்த்தும், குடியுரிமைச் சட்டத்தின் 1955ன் பரிவு 6ஏவை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இன்று(அக்.,17) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுத் தீர்ப்பு அளித்தது.

‘அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும்’ என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மொத்தம் 5 நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தார். மற்ற 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர். இதன் மூலம் அசாமில் 1966ம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like