1. Home
  2. தமிழ்நாடு

இன்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை..!

1

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால், கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார்.இந்த ஓராண்டு காலத்தில் பலமுறை ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.விசாரணைக்கு வரும் போது தள்ளுபடி செய்து விடுகின்றனர்.

கீழமை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் ஜாமீன் மனுவிற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அங்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடைசியாக மே 16ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் நீதிமன்ற எண் 6ல் ஐடெம் எண் 4ல் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளார். இதனை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கவுள்ளது.

Trending News

Latest News

You May Like